Designed by Veethemes.com

டிவி சானல் நிகழ்சிகளினால் உணர்வுகள் மாறும் குழந்தைகள்....




நான் படித்து கவலைப் பட்ட ஒரு பகிர்வு, உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன், அதற்குக் காரணம் இதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. கட்டாயம் படியுங்கள், பிடித்திருந்தால் ஒரு ஷேர் பண்ணுங்கள். முடிந்த வரைக்கும் நமது நண்பர்களுக்கு அறிவியுங்கள். ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமே தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை ...
இந்தப் பதிவு, இப்போது தொ(ல்)லைக்காட்சிகளில் நடைபெறும், சிறுவர்களின் பாடல் ஆடல் நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டது.
1- ஐந்து வயசு கூட நிரம்பாத சின்னம் சிறு குழந்தைகள், ஒரு வித கவர்ச்சி ஆடை அணிந்து குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள், நடுவர்களைப் பார்த்து முத்தம் கொடுத்து கண்ணடித்து இடுப்பை சுழற்றி முக்கல் முனகல்களுடன் சிணுங்கி..... இன்னும் என்ன என்னவோ கொடுமை எல்லாம் நடக்கிறது ...
பாடல் முடிந்ததும், அந்த நடுவர், உன்னோட குரல்லே அந்த ஃபீல் பத்தலேம்மா... இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் எடும்மா என்னு சொல்லுறாரு ஐந்து வயசு பிஞ்சு கிட்டே என்ன மாதிரி பீலிங் எதிர்பார்க்கிறார் அந்த நடுவர் ????
ஏம்மா புள்ளைக்கு இன்னும் கொஞ்சம் சொல்லிக் கொடும்மா என்னு சொன்னதும் அந்த பிள்ளையோட தாய், வெட்கத்திலே சிவந்து சரி என்னு தலை ஆட்டுறாங்க ...
ஆறு வயசுப் பையன், தான் பாடிய பாட்டை தன்னுடைய கேள்பிரண்டுக்கு சமர்ப்பிக்கிறான், அதைப் பார்த்து அவனோட அம்மா அப்பா கை தட்டி ஆரவாரிக்கிறார்கள்.
2- தன்னுடைய குழந்தை தோற்றுவிட்டால், அந்த தாய் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார், ஐயோ நான் எப்புடி வீட்டுக்கு போவேன் அப்பா என்னை கொண்ணே போட்டுவிடுவார் என்னு அந்த சின்னஞ்சிறுசு பதறுது. எதோ IPS .. IAS … எக்ஸாம் லே பெயில் ஆன மாதிரி குழந்தையோட தகப்பன் முகத்தை இருக்கமாக வைத்திருக்கிறார் ...
இது ஒரு பக்கம் இருக்க மற்றபக்கம், வெற்றி எடுத்த பிள்ளையோட தாய் பேட்டி கொடுக்குறா... ஒவ்வொரு நாளும் அதிகாலை.. அப்புறம் மாலை இரவு என்னு தொடர்ச்சியா ஆறு மாசம் என்னோட பிள்ளை பயிற்சி எடுத்துச்சு அதனாலேதான் இந்த மகத்தான வெற்றி என்னு அந்த தாய் ஆனந்தக் கண்ணீர் வடிக்குரா ...அவங்க அப்பா வெற்றிப் பெருமிதத்தில் ஒரு வீரப் பார்வை பார்குறார். ஆறு மாசமா பயிற்சியா ??? அப்போ அந்த குழந்தையோட படிப்பு ??? யாருமே கவலைப் படுவது போலே இல்லை ....
3 – இதெல்லாம் விட, அந்த நடுவர், அந்த சிறுமியைப் பார்த்து, ஏம்மா .. அந்த இடுப்பை சுழற்றி ஒரு பறக்கும் கிஸ் கொடுத்தியே அதை ஒன்ஸ்மோர் பண்ணிக்காட்டும்மா என்னு சொன்னதும் அந்த குழந்தை பார்வையாளருக்கு செய்து காட்டி கிஸ் கொடுக்குறது. அதைப் பார்த்து அந்த தாய் படும் வெட்கம் இருக்கே .. அட ..அட ...அட ... அப்போ அந்த நடுவர், இந்த பிள்ளைக்கு சினிமாவிலே நல்ல எதிர்காலம் இருக்கு.. என்னுடைய வாழ்த்துக்கள் என்னதும் அந்த தாய் தகப்பன் முக வெற்றிப் பெருமிதம் இருக்கே . அடடா . .அடடா ... .....
4 – இப்போதெல்லாம், ரியாலிட்டி ஷோ என்னு காட்டப்படும் நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கான சுற்றில் கொடுக்கப்படும் நிபந்தனைகள். வயசுக்கு மீறியதாகவும், கவர்ச்சியான ஆடைகளாகவும். குமரிகளுக்கான அங்க அசைவுகள் குறித்ததாகவும் இருப்பதை யாருமே கண்டுகொள்வதும் இல்லை, அதை பற்றி அந்த தாயோ அல்லது தந்தையோ யோசிப்பதும் கூட இல்லை. பாவம் அந்த பச்ச மண்ணு குழந்தைகள்.
5- நாம் இன்னும் அமெரிக்க கண்டத்திலோ, ஐரோப்பா கண்டத்திலோ இல்லை, ஆசியக் கண்டத்தில் அதுவும் அன்பும் பண்பும் கலாச்சாரமும் கொண்ட நமது நாட்டிலே இருக்கிறோம், குழந்தைகள் கல்வி அவர்களின் வளர்ப்பு என்பது தாய் தந்தையின் கைகளுக்குள்ளே இருக்க வேண்டுமே தவிர கழட்டிப் போட்டு ஆடிக் காட்டுவதிலே இருப்பது இல்லை.
6- ஒரு ரியாலிட்டி ஷோ லே, தன்னுடைய குழந்தை வெற்றி பெற்று அதிகமான ரசிகர்களினால் வாழ்த்தப் படுகிறது என்பது மகிழ்ச்சியான ஒரு விடயமே தவிர, அதில் இருக்கும் சுற்றுக்களில் நமது குழந்தையின் நிலைப்பாடுகள் என்ன, அந்தக் குழந்தையின் ஆடை வடிவமைக்கள், உடல் அசைவுகள், ஒவ்வொரு சுற்றுக்களும் என்ன சொல்கிறது என்று இப்போதைய தாய்மார்கள் கவனிக்காமல் இருபதுதான் வேதனை.
7- சிறு வயதில் இருக்கும் ஒரு குழந்தை, அதனுடைய சிந்தனைகளில், அதனுடைய செயற்பாடுகளில் இருக்க வேண்டுமே தவிர, குமரிகளுக்கான நடை உடை பாவனைகளை சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்கப்படுமானால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப் படுமே தவிர, பரிசாகக் கிடைப்பது வேறு எதுவும் இல்லை. அதையும் மீறி, குழந்தையின் உணர்ச்சிகளை அதனுடைய வயசுக்கு மீறி தூண்டி விடுவது, ஒரு நல்ல மனநிலையை குழந்தைக்கு உருவாக்குவதும் இல்லை.
8- காசுக்காகவும், பிரபல்யத்துக்காகவும் புதிது புதிதாக இந்த ரியாலிட்டி ஷோ என்னும் அரக்கன் நம்மிடையே புகுந்து கொண்டு இருக்கிறான். இந்த டீவி சனல்காரனுக்கு தேவை காசு, அதுக்கு பலிக்கடா நமது குழந்தைகள், இதை புரிந்து கொள்ளாமல் இருப்போதைய தாய்மார்கள். வேதனைக்குரிய விடயம் இது .....
9 – அம்மா, அந்த பொம்மை போட்டு இருக்கும் சட்டை போலே வாங்கிக் கொடு என்னு கேட்ட பிஞ்சுகள் எல்லாம், அந்த டீவிலே பாட்டுப் படிச்ச பொண்ணு போட்ட மாதிரி சட்டை வாங்கிக் கொடும்மா என்னு கேட்பது வெட்கப் பட வேண்டிய விடயமே ....
10 – இந்தப் பகிர்வின் நோக்கம், யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. என் மனதில் பட்ட கருத்துக்களை எழுதி இருக்கிறேன், இது சரியாக இருந்தால் ஒரு சேர் பண்ணுங்கள், நமது வீட்டிலே எந்த நிலைமையில் இருக்கிறது என்று ஒரு வினாடி யோசியுங்கள்.
“நமது வீட்டின் எதிர்காலம் நமது கைகளில்”

0 comments:

Post a Comment